வேப்பங்கொட்டையும் விரல் முட்டியும்
தேவையானப் பொருட்கள்: வேப்பங்கொட்டை
செய்முறை: வேப்பங்கொட்டைகளைத் தேடி எடுத்துக்கொள்ளுங்கள். தோலை நீக்கி விடுங்கள். இப்பொழுது கொட்டை மட்டும் இருக்கும். அந்த கொட்டையை சரிபாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். உள்ளே பருப்பு இருக்கும். அதை தூக்கி வீசி விடுங்கள்.
விளையாட்டு: ஒரு கையை மடக்குங்கள். நடு முட்டியில் அந்த சரிபாதியாக வெட்டிய கொட்டையை கவுத்து வையுங்கள். மற்றொரு கையால் அந்த கொட்டைய ஓங்கி அடியுங்கள். உடனே கையை பலமாக சுற்றுங்கள். கொஞ்சமாக ரத்தம் வரலாம். இது மனதிடத்துக்கு நல்ல விளையாட்டு. ஆபத்து இல்லாமல் விளையாடி மகிழுங்கள்.
கூடுதல் விளக்கம்:
சூடு கொட்டை என்ற விளையாட்டிலும் இப்படி சிறுவர்கள் கொட்டையைச் சூடேற்றி விளையாடுவார்கள். கல்யாண முருங்கை கொட்டையைத் தான் அதற்கு பயன்படுத்துவார்கள். இரத்தம் வருவதை வீர விளையாட்டாக விளையாடியிருக்கிறார்கள்.
top of page
John Britto
Parisutham
Search
bottom of page
Comments