தாள் எரிந்தது எப்படி? - பாரம்பரிய விளையாட்டு 6 - Traditional Game 6
- உயிர்மெய்யார்
- Feb 6
- 1 min read
தாள் எரிந்தது எப்படி?
தேவையான பொருட்கள்
தாள், வில்லை (லென்ஸ்)
செய்முறை
ஒரு வில்லை (லென்ஸ்) வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு தாளை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல சூரிய ஒளி இருக்கும் இடத்திற்கு வாருங்கள்.
விளையாட்டு
தாளை ஒரு கையில் பிடித்துக் கொள்ளுங்கள். அதன் மேலே வில்லையைப் (லென்ஸைப்) பிடித்துக்கொள்ளுங்கள். சூரிய ஒளி அந்த வில்லை மூலமாக தாளில் விழுமாறு வையுங்கள். வில்லை சூரிய ஒளிக்கதிரை வாங்கி, ஒருமுகப்படுத்தி, தாளில் விழவைக்கும். சூரிய ஒளியின் புள்ளி வட்டம் தாளில் ஒரே இடத்தில் பட்டுக்கொண்டே இருந்தால், அது திடீரேன புகையுடன் பற்றிக்கொண்டு எரியும். செய்து பார்த்து மகிழுங்கள்.
வில்லை (லென்ஸ்) இப்படியும் செய்யலாம்
ஒரு குண்டு விளக்கு (பல்பு) எடுத்துக்கொள்ளுங்கள். மேல்பகுதியை எடுத்துவிட்டு, அதில் நீரை ஊற்றுங்கள். குண்டு பல்பில் ஊற்றிய தண்ணீர் வழியாகப் பாருங்கள். எதிரே உள்ள பொருட்கள் பெரிதாகத் தெரியும். இதையும் தாளை எரிப்பதற்கு பயன்படுத்திப் பாருங்கள். சில நேரம் பிலிம் சுருளை அதன் பின்னே வைத்துப் பார்த்தால் பெரிதாகத் தெரியும். எதிரே சுவரில் காண்பித்தால் சினிமா பார்ப்பது போலத் தெரியும்.
Comentários