
2024ல் மலேசியாவுக்கு இந்தியாவிலிருந்து ஜோபா வல்லுநர்கள் 7 பேர் போயிருந்தனர். 19 தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று இயற்கை வாழ்வியல் குறித்து கலந்துரையாடினர். அவர்களோடு பயோனிட்டி (உயிர்மநேய) திட்டத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிறகு 6 பள்ளிகள் திட்டத்தில் இணைந்தன. ஆகக் கூடுதல் 25 தமிழ்ப்பள்ளிகள். திட்டத்தில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து தங்கள் வாழ்விலும் மற்றவர் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வருவர். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையைக் கடைப்படிக்க முயல்வர். அவர்களுக்கு இயற்கை வாழ்வியல் (உயிர்மநேய வாழ்வியல்) குறித்த புரிதல் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நூல் தயாரிக்கப்பட்டது.
Comments