குமரேசன் ஓவியரு
குடிசையில வாழ்ந்தாரு
அரும்பு என்ற மனைவியோடு
வறுமையில வாழ்ந்தாரு
அந்த நாட்டு அரசனுக்கு
வந்ததொரு அரிய ஆசை
அச்சு அசலா வரையச் சொல்லி
முறுக்குனாரு பெரிய மீசை
அரண்மனையில் குமரேசன்
அரசரையேப் பாத்தாரு
ஒத்த கண்ணு மன்னரையே
வரையும் வேலை ஏத்தாரு.
எதிரில் வந்த சேவகரு
எச்சரிக்கை பண்ணாரு
ஏற்கனவே ஓவியரு
செத்தகதை சொன்னாரு
ஒத்த கண்ணு பார்வையில்லா
மன்னரையே பாத்தவரு
அப்படியே வரைந்ததாலே
அடி வாங்கி செத்தாரு
ரெண்டு கண்ணும் இருப்பதாக
இன்னொருத்தர் வரைந்தவரு
உண்டு இல்லை என்றாகி
உயிரை விட்டு மறைந்தாரு
எப்படித்தான் வரைவதோ?
எப்படித்தான் வரைவதோ?
குமரேசன் குழம்பினான்
மனைவியிடம் விளம்பினான்.
இருவருமாய் யோசிக்க
இங்கிதமா வரைஞ்சாரு
அரசரிடம் காண்பிக்க
அவர் மகிழ்ந்து போனாரு.
ஒத்த கண்ணை மூடியே
மத்த கண்ணால் நோக்கியே
அம்பு விடும் அரசரை
அழகாக வரைஞ்சதாலே
முத்துமாலை பரிசு என்ன!
முன்னூறு தரிசு என்ன!
பொற்காசு பெருசு என்று
குமரேசன் சொகுசு என்ன!
ஒற்றுமையாய் பேசுவோமே
வித்தியாசமாய் யோசிப்போமே!
திறமைகளை வீசுவோமே
வெற்றிகளை நேசிப்போமே!!
*****
கருத்து: கூட்டு சிந்தனை, படைப்பாற்றல் சிந்தனை, அறிவு, திறமை, பிரச்னைகளைத் தீர்த்தல்
பாடல் ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம்
top of page
John Britto
Parisutham
Search
Recent Posts
See Allபாண்டியன் என்ற சிறுவன் ஒருவன் வேண்டியதெல்லாம் வெற்றி - மனம் தோண்டியேப் பார்த்தால் சத்தம் கேட்கும் எங்கும் வெற்றி வெற்றி சீண்டிய தோல்வியை...
நல்லூர்ல ஞானி ஒருத்தர் இருந்தாரு - அவர் நல்ல செய்தி கொடுப்பதனால் சிறந்தாரு அன்பழகர் என்ற சீடர் சேர்ந்தாரு - ஒரு விஷப் பாம்பை அறையில் அவர்...
எதுசரி? எதுசரி? வாழ்க்கையில் முடிவை தினமும் எடுப்பது எப்படி? - சின்ன கேசரி கிண்ணம், முந்திரி பருப்பு சொல்லுது சொல்லுது இப்படி. - எங்க...
bottom of page
Comments