top of page
Writer's pictureJohn B. Parisutham

2. முட்டை உடைந்தால்

குழந்தைகளை இரண்டு அணிகளாகப் பிரியுங்கள். ஒன்று ஜிங்கு அணி. மற்றொன்று மங்கு அணி. ஜிங்கு அணியை வரிசையாக நிற்க வையுங்கள். அவர்களுக்கு நேர் எதிரே, அவர்களைப் பார்த்தபடி, மூன்று அடி இடைவெளி விட்டு, மங்கு அணியினரை வரிசையாக நிறுத்துங்கள். ஜிங்கு அணியினரிடம் ஆளுக்கொரு முட்டையைக் கொடுங்கள்.


நீங்கள் விசில் ஊதியதும் ஜிங்கு(கள்) தன் கையிலுள்ள முட்டையை மங்குவிடம் தூக்கிப் போட வேண்டும். அவன் அதைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டானா? உடனே அவன் ஓரடி பின்னால் நகர வேண்டும். பிறகு தன் கையிலுள்ள முட்டையை ஜிங்குவிடம் தூக்கிப் போட வேண்டும். அவன் அதைப் பிடித்து, ஓரடி பின்னால் நகர வேண்டும்.

இப்படியே ஒரடி, ஒரடியாக இடைவெளி அதிகரித்துக் கொண்டே போக, எந்த ஜோடி முட்டையை உடையவிடாமல், அதிக இடைவெளி காட்டுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாகும்.


*****

கற்றல்: லாவகம், கவனம், இணைந்து செயலாற்றல், வெற்றி தோல்விகளை கையாளுதல்.

விளையாட்டை எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம், ஆஸ்திரேலியா

To buy the book on 240 inspirational and motivational games for children, email pjohnbritto@gmail.com


*****


11 views0 comments

Comments


bottom of page